வடக்குகிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வகையில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ள டக்கியே எமது அரசியல் தீர்வு அமையும். அப்பொழுதுதான் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாவதுடன், நாம் எதிர் நோக்கி நிற்கும் இலக்குகளையும் அடைய முடியும். இவ்வாறு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காரைதீவு பிரதேச சபையில் இடம் பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.காரைதீவுப் பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், பிரதேச தமிழரசுக்கட்சி முக்கியஸ் தர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண் டனர். மட்டக்களப்பு நாடா ளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரி யநேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு மேலும் தெரிவித்ததாவது: வடக்குகிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மறந்து விடக்கூடாது.வடக்குகிழக்கு இணைப்பை நாம் அடைவதற்கு முஸ்லிம் மக்களுடைய ஆதரவு எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளை நாம் பலமுறை பல காலங்களில் பேசியுள்ளதுடன் அதற்குச் சில அடையாளங்களுமிருக்கின்றன.இந்த வகையில் அவர்களையும் எங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கும் தீர்வைக் கொண்டு வரக்கூடியதாக எமது அரசியல் தீர்வு அமையுமென்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றோம்.அப்பொழுது வடக்ககிழக்க மாகாணத்தின் இணைப்பு சாத்தியமாகுமென்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிங்களவர்களாலும், பௌத்தமத கலாசார அமைச்சாலும், இராணுவத்தாலும் எங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது போல், முஸ்லிம் மக்களின் நிலங்களும், குடியிருப்புக்களும் அரசின் கையாட்களால், பௌத்த பிக்குகளால் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.இந்த விடயத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்றுதான் என்பதை முஸ்லிம்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.எனவே இணைந்த வடகிழக்கு மாகாணத்தை அடைவதற்கு அவர்களையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை என்றார். |