![]() |
நாட்டில் புதிதாக பரவிவரும் பெருவியாதியால் (leprosy) பாதிக்கப்படுவோரில் 9 சதவீதமானோர் 15 வயதிற்கும் குறைவானவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் பெருவியாதியால் பாதிக்கப்படும் 10 சதவீதமானோரின் வியாதி வெளியில் தெரிவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பெருவியாதிக்கு உள்ளான 30 வீதமானோர் முழுமையாக சிகிச்சைப் பெற்றுக் கொள்ளாததால் அது மற்றையவர்களுக்கும் பரவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் புதிதாக இந்த நோய்க்குள்ளான 56 சதவீதமானோர் நோய் ஏற்பட்டு 6 மாதங்களின் பின்னரே சிகிச்சைப் பெற வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு காரணம் நோய் மற்றும் நோய் அறிகுறி குறித்து மக்களுக்கு தெளிவின்மை காணப்படுதலே என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனால் பெருவியாதி குறித்து பொது மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.