அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புக்கள் குறைந்த பிரதேசங்களில் காணிகளை தெரிவு செய்து குறைந்த செலவில் உயர்ந்ததரத்துடன் இந்த அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பயணத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிவேக வீதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் ஊடாக முதலீடு தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
98 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கொழும்பு - கண்டி அதிவேக வீதியினூடாக 45 நிமிடங்களில் கொழும்பில் இருந்து கண்டியைச் சென்றடைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
கொழும்பில் இருந்து மீரீகம வரையும், மீரீகமையில் இருந்து - குருநாகல் வரையும் அங்கிருந்து கண்டி வரையிலும் மூன்று கட்டங்களாக அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வற்கு திட்டமிடப்பட்டுள்ளது.