ரஷ்யாவின் செய்மதி தொலைக்காட்சி ஒன்றுக்காகவே அவர் இந்த நிகழ்ச்சியினைத் தயாரித்து வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகத்தில் உள்ள பிரபலமான அரசியல் சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள், மாற்றுக்கருத்துக்களை உடையவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சி மூலம் பேட்டி காணப்படவுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்ச்சி ஒளிபரப்படவுள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய தொலைக்காட்சி மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜுலியன் அசேஞ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பல தகவல்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார்.