தலைவர் பதவியிலிருந்து விலகல் தில்ஷான்
இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இருந்து உடனடியாக விலகுவதாக திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை அவர் தேசிய தெரிவுக் குழுவின் தலைவரிடம் கையளித்துள்ளார்.
இதற்கமைய டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் ருவெண்டி ருவெண்டி போட்டிகள் அனைத்திலுமான தலைமைப் பதவியில் இருந்து அவர் விலகுகின்றார்.
இதேவேளை,
திலகரட்ன தில்ஷான் இலங்கை கிரிக்கட்டிற்காக மேற்கொண்ட சேவைகளை
பாராட்டியுள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் நிறைவேற்று குழுவினர்,
தொடர்ந்தும் அவர் தேசிய அணியில் உறுப்பினராக செயல்பட வேண்டும் என
கோரியுள்ளனர்.
இதனிடையே,
முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்த்தனவினை
மீண்டும் இலங்கை தேசிய அணியின் தலைவராக நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட்
தீர்மானித்துள்ளது.