ஈரானின் அணு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கு
எதிரான பொருளாதார தடையை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின்
தூதுவர்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களின் அமர்வின் போது இது
குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஈரானுடனான சகல எண்ணெய் ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தற்போது அமுலில் உள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் எதிர்வரும் ஜுலை
மாதம் முதலாம் திகதியுடன் ரத்து செய்யப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது எண்ணெய் தேவையின் இருபது சதவீதமானவற்றை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கின்றது.
இந்தநிலையில், அமெரிக்க பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், பாரசீக
குடாவின் ஹோமுஸ் நீர் பரப்பிற்கு அமெரிக்க விமான தாங்கி கப்பல், ஏப்ரகாம்
லிங்கன், பிரிட்டிஸ் கடற்படை யுத்த கப்பல் என்பன சென்றுள்ளன.
ஈரானுக்கு எதிராக கொண்டு வரப்படும் பொருளாதார தடையின் போது
ஏற்படக்கூடிய அசம்பாவித தன்மையை கண்காணிக்கும் நோக்கிலே இந்த கப்பல்கள்
அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது