பூமியை தாக்க ஆரம்பித்துள்ள சூரிய புயல்

அதிசக்தி வாய்ந்த துணிக்கைகளைக் கொண்ட சூரிய புயல் பூமியை தாக்க ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான பாரிய சூரிய புயல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
குறித்த ஏற்றங்களுடைய துணிக்கைகள் அதிகமாக செய்மதிகள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

வட துருவங்களுக்கு அருகில் பயணிக்கும் விமானங்களையும் தொலைதொடர்புகளையும் குறித்த துணிக்கைகள் தாக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த புவிகாந்தப் புயல் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த காந்தப் புயலில் விளைவுகள் இன்றைய தினம் முழுவதும் பூமியில் உணரப்படும் என விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட புவிகாந்தப் புயல் காரணமாக அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தின் நீண்ட தூர தொலைபேசி தொடர்புகள் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now