புதிதாக உள்ளக விமான சேவை அறிமுகம்

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை வழங்கும் வகையில் செனொக் நிறுவனம் நேற்று புதிதாக உள்ளக விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
 

எயார் செனொக் என பெயரிடப்பட்டுள்ள  குறித்த உள்ளக விமான சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்றது.

எயார் செனொக் உள்ளக விமான சேவையை அறிமுகப்படுத்துவதற்காக கொழும்பு பி.ஆ.ர் சி விளையாட்டரங்களில் நடைபெற்ற வைபவமொன்றின் போது அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்களை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் செனொக் நிறுவனத்தின் தலைவர் நெயெல் செல்வநாயம், பணிப்பாளர் ஹரீன் டி கொஸ்தா ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும், ஊழியர் குழுவின் பிரதம அதிகாரியுமான காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now