களனி
பிரதேசத்தில் இடம்பெற்று வருவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்செயல்கள்
குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபர்
என்.கே.இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
பொது
மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக களனிபிரதேச சபை
தலைவர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட உறுப்பினர்களும், பிரதேச
சபைஉறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சரும் குற்றச்சாட்டுக்களை சராமரியாக
முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக
பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கடத்தல், கப்பம்கோரல் மற்றும் பாதாள உலகக்
கோஷ்டி நடவடிக்கைகளுடன் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குஎதிராக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறுஜனாதிபதியிடம் பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் பிரசன்ன ரணவீர பல்வேறு மோசடிநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பான எழுத்து மூல ஆவணங்கள் தம்மிடம் காணப்படுவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தகாவல்துறையினரின் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.