விடுதலைப் புலிகளின்
முன்னாள் ஆயுத முகவரும் தற்போது அரசின் காவலில் இருப்பவருமான கே.பி என்கிற
குமரன் பத்மநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
பருத்தித்துறை, இன்பருட்டியில் உள்ள "நேர்டோ' அமைப்பின் அலுவலகத்தில்
நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கி உண்ட கே.பி, பிற்பகல் ஒரு
மணியளவில் மீனவர்களுக்கு படகு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அங்கு 25 மீனவர்களுக்குப் படகுகள் வழங்கப்பட்டன.
|
||