பயங்கரவாதம்
முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, இதனால், பயங்கரவாத பிரச்சினை முடிவக்கு
வந்து விட்டது என நினைக்க வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர் தியாகங்களை செய்து பெறப்பட்ட அமைதியை
அழிக்க சில சக்திகள் முயற்சித்து வருவதாகவும் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எகலியகொட
பிரதேசத்தில் பாடசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்
இதனை கூறியுள்ளார். நாட்டில் மக்கள் வாழக் கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்த
அரசாங்கத்திற்கு இருக்கும், பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். நாட்டில்
இருந்த கொடூரமான பயங்கரவாதத்தை அரசாங்கம் இல்லாதொழித்ததை மக்கள் மறக்க
மாட்டார்கள்.
தற்பேது
நாட்டில் அமைதி நிலவுகிறது. அதிகளவான முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
நாட்டின் துரிதமான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள்
அச்சம், சந்தேகமின்றி வாழ்கின்றனர். இதற்கு காரணம் நாட்;டில் நிலவும்
அமைதியே. பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த சுதந்திரத்தை இல்லாமல்
செய்துக்கொள்ளக் கூடாது. நாடு பெற்ற சுதந்திரத்தை அழிக்க சில சக்திகள்
மீண்டும் தலைக்தூக்கி வருகின்றன. பாதுகாப்பு தரப்பினர் இது குறித்து
உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இப்படியான சந்தர்ப்பங்கள் மக்கள்
அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். வேறு நாடுகளில்
இருந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. பயங்கரவாத்தை மீண்டும் கட்டியெழுப்ப
முயற்சிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.