கொள்ளை மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நால்வர் வலஸ்முல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், மேலதிக விசாரணைக்காக மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய், என்பதுடன் மற்றையவர் இராணுவத்தில் உள்ளவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏனைய இருவரும் பௌத்த குருமார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரி56 ரக தானியக்க துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து களவாடப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.