முல்லேரியா சம்பவம், முதலில் சுட்டது. பாரதலக்ஷ்மன் தரப்பு

முல்லேரியா சம்பவம், முதலில் சுட்டது. பாரதலக்ஷ்மன் தரப்பு
2012 ஐனவரி மாதம் 06 வெள்ளிக் கிழமை- பி.ப 12:35
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாமீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட முல்லேரியா சம்பவத்த்தை ஆரம்பித்து, முதலில் துப்பாக்கி சூட்டினை நடத்தியது, பாரதலக்ஸ்மன் குழுவினரே என ஆதாரத்துடன் உறுதிப்பட்டுள்ளதாக, இரகசிய காவற்துறை பிரிவினர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்து விளக்கமளிக்கும் போது, இரகசிய பிரிவின் இணைப்பு அதிகாரி சான் அபேசேகர இதணைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாவை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பாரதலக்ஸ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ராஜ்புர காமினி என்பவர், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக 5 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களில், பாரத லக்ஸ்மனின் வாகனசாரதியாக இருந்த லியனகே சமன் சாந்த என்பவரும் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும்.

பாரத லக்ஸ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ராஜ் புர காமினி, இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தாம் கண்களால் கண்டதாக, பாரதலக்ஷ்மனின் வாகன சாரதியாக இருந்த லியனகே சமன் சாந்த பெரேரா சாட்சி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாமீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட முல்லேரியா சம்பவத்த்தை ஆரம்பித்து, முதலில் துப்பாக்கி சூட்டினை நடத்தியது, பாரதலக்ஸ்மன் குழுவினரே என இரகசிய காவற்துறை பிரிவினர் ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில்; தெரிவித்திருந்தனர்.

தம்மை நோக்கி எதிர்தரப்பு துப்பாக்கி பிரயோகம் நடத்தும் போது, அதில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, பாதிக்கப்படுகின்றவர்கள் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிரபல சட்டத்தரனிகள் தெரிவித்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now