தாம் ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்க போவதில்லை என பிரான்ஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் பிரான்ஸில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவலை நிராகரித்து பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாரிஸில் உள்ள இலங்கை தூதரகரத்திடம், பிரான்ஸ் அஞ்சல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.