ரத்மலானை இந்து கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களும், பெற்றோரும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு, தற்காலிகமாக அதிபராக பதவிவகித்து வந்தவர் பொறுப்புக்களை கையளிக்காமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் பிலியந்தலை வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம். திலகரத்ன கருத்து தெரிவிக்கும் போது.
இந்த பிரச்சினை தொடர்பில் ஆளுனருடன் தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும், எதிர்வரும் திங்கட் கிழமை தாம் வந்து புதிய அதிபரிக்கு பொறுப்புக்களை கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.