எதிர்வரும் சுதந்திர
தினத்தன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் கட்டாயமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டே
ஆகவேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. ஜோன் செனவிரட்ண இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் 04ம் திகதி நாடு முழுவதழலும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனை சிறப்பாக கடைபிடிக்கும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத:து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும். இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாகும் என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையின் எதிர் கால நோக்கு தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் பொது மக்களை அறிவூட்டுவதற்றாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சிக்கும் அதனோடு இணைந்த செயற்திட்டங்களுக்குமாக மட்டும் 21 ஆயிரம் மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார். |
சுதந்திர தினத்தன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்ற அரசு உத்தரவு
Labels:
இலங்கை