மரக்கறி மற்றும் பழங்களை போக்குவரத்தின் போது பிளாஸ்ரிக் கூடைகளில்
எடுத்துச் செல்வது என்ற நடைமுறை எந்தவொரு தரப்பினரதும் வரவேற்பை பெறவில்லை
என விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நன்மை கருதியே இந்நடைமுறை கொண்டுவரப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டார்.
பேராதெனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் சந்தர்ப்பத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மரக்கறி மற்றும் பழங்களை சாதாரணமாக, விவசாயிகள் எடுத்துச் செல்லும் போது அநேகமானவை விரயமாகிறது. இதன் பிரதிபலனாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அமைச்சர் கூறினார்.