வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டிலிருந்து இடம்பெயரவில்லையாம்


இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரமல்ல: யூ.என்.எச்.சி.ஆர்:- நீண்ட கால யுத்தத்தினால்  வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) தெரிவித்தது. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யூ.என்.எச்.சிஆர் நிறுவனமே தடையாக உள்ளது. இதற்கு எதிராக  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த வழிகாட்டல் தத்துவங்களுக்கு அமைய இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு, மனிதாபிமான உதவி என்பவற்றை வழங்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியதாகும்.

இதனடிப்படையில் பழைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது ஏப்ரல் 2008க்கு முன் யுத்தத்தின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை குறிக்கும் பதமாகும்.

புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது  ஏப்ரல் 2009க்கு பின்னர் யுத்தம் முடியும் வரை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை குறிக்கும்.
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு யூ.என்.எச்.சி.ஆர் ஆதரவளித்து வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமும் உதவிகளை வழங்குவதன் மூலமும் இது நடந்து வந்தது.

நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த காரணத்தினால் நீண்ட கால உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு ஏதோவொரு கட்டத்தில் வருடம் முழுவதும் உதவிகளை பெற்றனர் என்பதை மனதிலிருத்துவது முக்கியம்.
இந்த உதவிகள் உணவு மற்றும் வீட்டு தேவை பொருட்களை வழங்கள்இ அவசர சுகாதார கவனிப்புக்களை வழங்குதல்இ உள – சமூக செயற்பாடுகள், உறைவிட உதவி, சட்ட உதவி மற்றும் சிறுவர் பாதுகாப்பு என பல வழிகளிலும் அமைந்தன. இவை அவதானிக்கப்பட்ட தேவைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன.

இது போன்ற தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய உதவி திட்டமாக நீண்ட கால உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான உலக வங்கியின் புத்தளம் வீட்டு திட்டம் காணப்படுகின்றது.

32 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டம் செப்டம் 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வீடமைத்தல், குடிநீர், சுகாதார வசதிகள் என்பவற்றை புத்தளத்திலிருந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வழங்குவதையே நோக்கமாக கொண்டது.'

இலங்கையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தினால்  வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டிலிருந்து இடம்பெயரவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
சொந்த வீடுகளுக்கு திரும்பும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு யூ.என்.எச்.சீ.ஆர் ஒழுங்கு முறையாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவுகின்றது.

இவர்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான யூ.என்.எச்.சீ.ஆரின் சகல திட்டங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.

உள்நாட்டு மோதல் மே 2009 இல் நிறைவுக்கு வந்த பின்னர் புதிதாக வந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக உனடியான உயிர் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் அவற்றின் பங்குதாரர்களுடன் அரசாங்கமும் இணைந்து கொண்டது.

இந்த வகை உள்நாட்டில் இடம்பெயர்ந்தேர்கள் பெரும் வன்முறை சார்ந்த யுத்தம் நடந்த பிரதேசத்தினுள் பல மாதங்களாக பல தடவை இடம்பெயர்ந்து அவலப்பட்டவர்கள்.

அவர்களில் அதிகமானோர் தமது சொத்துக்களை இழந்து உள ரீதியாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு ஆளானவர்கள். கடும் யுத்தத்தினால் பல வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. அதே சமயம் பல வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் இயங்கிய கட்டிடங்கள் சேதமடைந்தன
.
அவர்கள் வாழ்ந்த யுத்த பகுதியில் அத்தியாவசிய சேவைகள் கூட தொழிற்படவில்லை. இந்த நிலையில் புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு அவசியமனதும் அவசரமானதுமான உதவிகளை தேவைப்படும் நிலையில் காணப்பட்டனர்.

எனவே இந்த மக்களுக்கு உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. யூ.என்.எச்.சி.ஆர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு தமது வீடுகளுக்கு திரும்பும்  அகதிகளுக்கும் தன்னானாலான உதவிகளை கிடைக்கும் நன்கொடைகளுக்கு அமைய செய்யும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now