குற்றத்தடுப்புக் காவல் திணைக்களத்தில் புதிய பிரிவு ஆரம்பம்.
சிறிலங்கா குற்றத்தடுப்பு காவல்
தினணக்களம் காணி தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு புதிய பிரிவு ஒன்றை
ஆரம்பித்துள்ளது என காவற்துறையின் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகன
தெரிவித்துள்ளார்.
இதற்கென 1933 அல்லது 2321415 புதிய தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முறைகேடான வகையில் இடம்
பெறும் காணிகள், வீடுகள், கட்டங்கள் தொடர்பில் இடம் பெறும் மோசடிகளினை பொது
மக்கள் உடனடியாக அறிவிப்பதன் ஊடாக பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக் கொள்ள
முடியும்.
எந்த ஒரு சொத்துக்களும் நபர்களாலோ அல்லது
அமைப்புக்களினாலோ பலாத்காரமாக பறிக்கப்பட்டாலோ அல்லது பலவந்தமாக
வைத்திருந்தல் தொடர்பாக முறைப்பாடுகளை இவ் தொலைபேசியின் ஊடாக தெரிவிக்க
முடியும்.
|