சவூதி
அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிசானா
நாபீக்கை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய
முதலாம்சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ஷ இந்தத் தண்டனையைவிதித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் n;தாடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கு தலாஅறுபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் ரிசனாவின் தாயாருக்கு வழங்கப்பட வேண்டுமெனஉத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர், ஏனையவர் குற்றத்தைஒப்;புக்கொள்ளவில்லை.
மூதூர்
சாபி நகரைச் சேர்ந்த அப்துல் லத்தீப், கொள்ளுப்பிட்டியைச்சேர்ந்த பாகீர்
மொஹிதீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோருக்கு எதிராக
வழக்குத்தொடரப்பட்டிருந்தது.
குறித்த மூவரும் போலியான ஆவணங்களைத் தயாரித்து ரிசானாவைவெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.