டெஸ்ட்
போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் கடும்
விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் டோனிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கங்குலி
உட்பட மூத்த வீரர்கள் சிலர் டெஸ்ட் போட்டியில் விளையாட டோனிக்கு ஆர்வம்
இல்லை எனவும், அவர் வகுக்கும் வியூகங்கள் டெஸ்ட் போட்டிக்கு
கைகொடுப்பதில்லை எனவும் சாடினர்.
இதற்கிடையே
2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு டெஸ்ட் அல்லது ஒருநாள்
போட்டி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஓய்வு பெறுவேன் என டோனி பரபரப்பாக
அறிவித்தார்.
இது
ஒருபுறம் இருக்க சேவாக் அணியில் பிளவை ஏற்படுத்துகிறார் என அவுஸ்திரேலியா
மீடியாக்கள் எழுதின. இவற்றுக்கெல்லாம் மேலாக மூத்த வீரர்களை வெளியேற்ற
வேண்டும் என கோஷமும் தற்போது மேலோங்கியுள்ளது.
இந்த
நெருக்கடிகளால் அணியை மறுசீரமைப்பு செய்ய தேர்வுக்குழு முடிவு
செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக டோனி டெஸ்ட்
போட்டி அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.
சேவாக்
கூறுகையில், மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. எனினும்
இது உடனே நடைபெறாது. தற்போது அந்த வரிசையில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்
உள்ளனர்.
அவர்கள்
ஓய்வு பெற்றவுடனும் அடுத்த அணித்தலைவர் யார் என்பதும் முடிவு செய்யப்பட்ட
பின்னர் மிடில் ஆர்டர் குறித்து முடிவு செய்வேன். மூத்த வீரர்கள் ஓய்வு
குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஓய்வுபெறும்
முடிவு அவர்களது கையில் தான் உள்ளது. எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று
அவர்களுக்கு நன்கு தெரியும். தற்போதைய நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு
மட்டுமே நான் அணித்தலைவராக உள்ளேன்.
நிரந்தர
அணித்தலைவர் பதவி குறித்து தேர்வு குழுவினர்தான் முடிவு செய்வார்கள். நான்
பார்த்ததிலேயே தற்போதுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து கூட்டணிதான் சிறந்தது.
பவுண்டரி அடிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.
சரியான
திசையில் நேர்த்தியாக பந்துகளை வீசுகின்றனர். பவுண்டரி விளாசும்படி
எந்தவகையிலும் எளிதான பந்தை அவுஸ்திரேலிய வீரர்கள் வீசுவதில்லை. அப்படியே
பவுண்டரி அடித்தாலும் அது சவாலாகதான் இருக்கிறது என்றார்.