நில்வள கங்கையில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலைக்கு இரையாகிய பரிதாபகரமான சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற
இந்த சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண
தெரிவித்தார்.அக்குரஸ்ஸ, அமலகொட கங்காராம விகாரைக்கு அருகே ஊடறுத்துச்
செல்லும் நில்வள கங்கையில் மேற்படி பெண் நீராடச் சென்றுள்ளார். இதன் போது
அந்தப் பிரதேசத்திற்கு வந்த முதலை அந்தப் பெண்ணை கதற கதற காவிச்
சென்றுள்ளது.
குறித்த பெண்மணி முதலையின் பிடியிலிருந்து
தப்ப பல்வேறு பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ள போதிலும் அது தோல்வியில்
முடிவடைந்துள்ளது. அக்குரஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடை சாகரிகா
குமுதுனி த சில்வா என்பவரே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.