முன்னாள் புலி உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர் –ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு

முன்னாள் புலி உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர் –ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு


 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துசெயற்படுவதாக ஜே.வி.பி. கிளர்;ச்சிக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.
 
வட மாகாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்முன்னாள் போராளிகள் இணைந்து கொண்டுள்ளதாக கிளர்ச்சிக்குழு உறுப்பினர் உந்துல் பிரேமரட்னதெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதிலும் சுமார் 900 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 500 கைதிகளுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் புலிப் போராளிகள் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதனை மறுக்கவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு பிரிவினைவாத அமைப்புடனும் இணைந்து தாம் அரசியல்நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழர்கள் என்ற காரணத்தினால் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாகக ;குறிப்பிட்டுள்ளார்.
 
வகுப்புவாதம் தொடர்பான பிரச்சினைகளும் முக்கிய இடத்தை வகிப்பதாகத்தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதிலும் வேறும் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
புலி உறுப்பினர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now