
உயர்தரப்
பரீட்சையில் சித்தியடையும் மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதியை
நிர்ணயிக்க தற்போது பயன்படுத்தப்படும் இசட் புள்ளி முறைமை
இல்லாதொழிக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.
தாம்
பிரதமராக பதவி வகித்த 2002-2004ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இசட்
புள்ளி முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது என
அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும்,
ஜனநாயக விரோத முறையில் தமது ஆட்சிகலைக்கப்பட்டதாகவும் இதனால்
திட்டமிட்டவாறு இசட் புள்ளி முறைமையை ரத்து செய்ய முடியவில்லைஎன ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இசட் புள்ளி முறைமை ரத்து செய்வது தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றியவிசேட உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இசட் புள்ளி முறைமையை ஆரம்பம் முதலே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உயர்கல்வி கற்றுக்கொள்வதனை ஊக்கப்படுத்தும் வகையில்அரசாங்கத்தின் கொள்கைகள் அமையப் பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப்
பரீட்சை பெறுபேறு குளறுபடிகளினால் பரீட்சை திணைக்களத்தின்மீதான மக்களின்
நம்பிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
