
குற்றச் செயல்களை தடுப்பதற்கும், மோட்டார் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக..
கொழும்பு
நகரை கண்காணிப்பதற்கு மேலும் பாதுகாப்பு கமராக்கள்பொருத்தப்பட உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. மேலும் நூறு பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட
உள்ளதாக காவல்துறையினர்அறிவித்துள்ளனர்.
குற்றச்
செயல்களை தடுப்பதற்கும், மோட்டார் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை
மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தக் கமராக்கள்
பயன்படுத்தப்படஉள்ளன.
2010ம் ஆண்டில் 350 மில்லியன் ரூபா பெறுமதியான 108 பாதுகாப்புகமராக்கள் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்தது.
கொழும்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைகண்காணிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலதிகமாக
பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதன் மூலம் குற்றச்செயல்களை பாரியளவில்
கட்டுப்படுத்த முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
