
தனியார்
பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலத்திற்கு பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள் கடும்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சட்ட மூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடும்
நோக்கில் நேற்றைய தினம்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள வேலை நிறுத்தப்
போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
சட்ட
மூலத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதன் மூலம் இந்தப்பிரச்சினைக்கு
தீர்வு காண முடியாது என பல்கலைக்கழக விரிவுரையாளாகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவத தொடர்பில் சகலவிரிவுரையாளர்களின் கருத்துக்களையும் கோரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் அவசியப்படுகின்றது எனவிரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாற்றங்களை மேற்கொள்ளும் போது அனைத்துத் தரப்பினரும் இணக்கப்பாடுமிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளனர்.
