பரீட்சை தொடர்பாக முறையிட புதிய இலக்கம்

Who Do You Contact Regarding Do Not Call Complaints?thumbnail



பரீட்சை பிரச்சனை தொடர்பாக அறிவிக்க பரீட்சைகள் திணைக்களம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த தொலைபேசி இலக்கம் இன்று முதல், நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
1911 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பரீட்சை தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக ஆராய ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
 
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கு அமைய, முன்னர் இடம்பெற்ற பரீட்சைகளின் குளறுபடி மற்றும் நடைபெறவுள்ள எந்தவொரு பரீட்சைகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும், இந்த தொலைபேசியின் ஊடாக முறையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now