இலங்கை வர்த்தக பயணிகளுக்கு பிரத்தியே கடவுச் சீட்டு ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
த பிஸ்னஸ் ஒன்லைன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தேசிய வர்த்தக சம்மேளனத்தினர் இது தொடர்பில் குடிவரவு திணைக்களத்துடன் பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக
பயணிகளுக்கான இந்த விசேட கடவுச் சீட்டின், வர்ணம் மாற்றப்படுவதுடன்,
மேலதிக பக்கங்களும் இணைக்கப்பட்டிருக்கும் என வர்த்தக சம்மேளனத்தின்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைக் கொண்டுள்ளவர்கள், தங்கு தடையின்றி நாட்டினுள் வர்த்த நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.