ஆம் யுத்த காலம் முதல் இன்று வரை பல ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் கடத்தப்படுவதும் கொலை செய்யப்பட்டுள்ளமையும் இலங்கையில் இன்னும் ஊடக சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
இதே நேரம் உண்மை செய்தியை உலகுக்கு கொண்டு வர வேண்டிய பல ஊடகங்கள் தங்கள் சார்பாக கருத்துக்களை பக்க சார்பாக வெளியிடுவதுடன் தாம் யாருக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை பற்றிய அவதூறுகளை மாத்திரம் அள்ளி வீசுவதற்கு ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
www.lankanow.tk என்ற இந்த நமது செய்தித் தளம் முடிந்த வரை உண்மைத் தகவலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதும் ஊடகங்கள் உண்மைச் செய்தியை உலகுக்கு கொண்டு வருவதும் இரண்டும் சரிசமமாக நோக்க வேண்டிய பிரச்சினைகள் என்பதை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.
2012ம் ஆண்டின் இனிய உதயமாக உருவெடுத்திருக்கும் www.lankanow.tk என்ற இந்தத் தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பான உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.
விமர்சனங்களையும் , ஆலோசனைகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி