சிறிலங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகைக வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா உல்லாசப் பயணச் சபை அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 97 ஆயிரத்து 517 ஆகப் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுவரும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளும் உல்லாசப் பயணிகளுக்கு அளித்துவரும் விசேட சலுகைகளுமே இவ்வாறு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிப்புக்குக் காரணமாகும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது. |
சிறிலங்காவுக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பரில் மட்டும் அதிகரிப்பு
Labels:
இலங்கை