யாழில் பரவும் திடீர் காய்ச்சல்


news
யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் "தைபஸ்" எனப்படும் ஒட்டுண்ணிக் காய்ச்சலின் தாக்கம் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் கடந்த வருடம் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழ். குடாநாட்டில் "தைபஸ்" நோயின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது. இந்த நோய் உண்ணி தெள்ளு மற்றும் ஒரு வகைப் பாலுண்ணியாலேயே காவப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வுகளின் பிரகாரம் தைபஸின் ஒரு வகையான சிறப்(scrub) என்னும் கிருமி ஊடாகவே யாழ்ப்பாணத்தில்  இது பரவி வருகின்றது.

பற்றைகள் முட்புதர் காடுகள், புல்தரைகள், இலைகள், சருகுகள் ஆகியவற்றில் இருந்தே இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகின்றது. மனித உடம்பின் ஈரமான பகுதிகள் ஊடாகவே இந்த நோய் உடலினுள் பரவுவதாக மருந்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாலுண்ணி கடித்த இடத்தில் புண் ஏற்படும். அத்துடன் தொடர்ச்சியாக இரண்டு நாள் காய்ச்சல், உடம்பில் குளிர், வயிற்று நோ, தலையிடி, தலைச்சுற்று என்பன ஏற்படும். இந்த "தைபஸ்" கிருமியானது குருதி காலங்களினுள் சென்று பல்கிப் பெருகி திரட்டி ஏற்படுவதாலேயே  நோய் ஏற்படுகின்றது. இதை அலட்சியம் செய்து கவனிக்காமல் விட்டால் இரத்தக் குழாயில்  கட்டி ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

அத்துடன்  செல்லப்பிராணிகளிலிருந்தும் தெள்ளு மூலமாகவும்  இந்த நோய் ஏற்படலாம். எனவே பற்றைகளை  வெட்டும் போது, புபற்தரைகளில் இருக்கும் போது பாதுகாப்பான உடைகள் அணிந்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now