பிரான்ஸ் நாட்டையும் தொடர்ந்து கனடாவிலும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அஞ்சல் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமான கனடா தமிழ் இளைஞர் பேரவையால் கனடாவில் வெளியிடப்பட்டிருப்பதாக ஒட்டாவிலுள்ள சிறிலங்க நிறுவனமான ஐக்கிய தேசிய ஒன்றியம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு இது தொடர்பில் கனேடிய பொதுவிவகார மற்றும் அரசாங்க சேவைகள் அமைச்சர் ரோனா அம்ரோஸிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது. அம் முறைப்பாட்டில், தனிப்பட்ட சில விடயங்களை நினைவு கூரும் நோக்கில் கனேடிய தபால் சேவை வழங்கிய சந்தர்ப்பத்தை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் கனேடிய தபால் திணைக்களத்தின் சேவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த தபால் முத்திரையை உடனடியாக ரத்து செய்யுமாறும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமேனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவப் படம் பொறித்த முத்திரை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் கடும் குழப்புமுற்ற சிறிலங்கா அரசாங்கம் பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தை விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
கனடாவிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான முத்திரை வெளியீடு
Labels:
உலகம்