தொடரைத் தொலைத்த தோணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது குறித்து இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ஆஸி. வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான கிரிக்கெட் விளையாடினார்கள்.

பார்ட்னர்ஷிப் தேவைப்படும் இடங்களில் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். 

பந்துவீச்சாளர்களும் நல்லமுறையில் செயல்பட்டனர். ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமானது. ஆனால் இந்த முறை துல்லியமான பந்துவீச்சு மூலம் மிரட்டினார்கள். 

ஒருமுறைகூட பவுண்டரிக்கான பந்தை அவர்கள் வீசவில்லை. இதனால் வெற்றி அவர்கள் வசமானது. எங்களது அடுத்த டெஸ்ட் தொடர் செப்டம்பரில் தான் உள்ளது. அதற்கு அவகாசம் நிறைய உள்ளது. சீனியர்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை.

மாற்றங்களை பொறுத்திருந்து பாருங்கள். தற்போது நாங்கள் ஒருநாள் தொடரை எதிர்கொண்டிருக்கிறோம். அனுபவம் மற்றும் இளமை வாய்ந்த அணி இது. 100 ஒருநாள் போட்டிக்கு மேல் விளையாடி விட்டால் அந்த வீரரை டெஸ்ட் போட்டியில் களமிறக்கலாம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இவ்வாறு தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now