விண்வெளியினில்
வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியின் இன்பருட்டி
கரையோரப்பகுதியினில் வீழ்ந்ததாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று பிற்பகல்
வேளை வடமராட்சியின் இன்பருட்டி கடற்பரப்பினில் பெரும் தீச்சுவாலையொன்று
ஏற்பட்டிருந்தது. சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பெரும்
தீச்சவாலையும் கடல் நீர் சிதறி வீசப்படுவதையம் கரையோரப்பகுதி மக்கள்
கண்டு;ள்ளனர்.
கடலில் பெரும் பிரகாசத்துடன் தீப்பற்றி எரிந்தது என்னவென்பது
தெரியாது மக்கள் அச்சத்துடன் கரையோரப்பகுதிகளில் ஒன்று குவிந்து வேடிக்கை
பார்த்தவண்ணமிருந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் படையினருக்கும்
தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் நேரினில் வந்து வேடிக்கை
பாhத்துவிட்டு திரும்பி விட்டனர்.
மக்களிடையே
சம்பவம் தொடர்பினில் அச்சமான சூழ்நிலையொன்றே காணப்பட்டது. எனினும்
தீச்சுவாலை காணப்பட்ட இடத்திற்கு மீனவர்கள் சிலர் படகுகளினில் சென்று
பார்வையிட்ட போது அப்பகுதியினில் தீ அணைந்திருந்தது.
இந்நிலையினில்
விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலமே இப்பகுதியினில்
வீழ்ந்திருக்கலாமென ஊகங்கள் இரவு வெளியாகியிருந்தது. விண்வெளியினில்
வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலம் இன்று அல்லது நாளை இந்து
சமுத்திரப்பகுதியினில் வீழ்ந்து வெடிக்கலாமென கொழும்பு பல்கலைக்கழக
பௌதிகவியல் பீடாதிபதி கலாநிதி சந்தன ஜயரட்ண தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்
ரஸ்ய விண்கலம் பூமியில் வீழ்வதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை.
16-01-2012
ரஸ்ய
விண்கலம் பூமியில் வீழ்வதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பீடாதிபதி
டொக்டர் சந்தனஜயரட்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியில் வெடித்துச் சிதறியுள்ள ரஸ்ய விண்கலம், இந்துசமுத்திரப் பரப்பில் வீழக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று அல்லது நாளை இந்த விண்கலம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.