பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதமாக பந்து வீசியமைக்காக தோனிக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த போட்டியின் தலைமைத்துவம் விரேந்திர ஷெவாக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டமையால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இந்திய அணிக்கு இது மேலும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.