கஹவத்தை மர்மம் குறித்து தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம்


இரத்தினபுரி - கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற தாய், மகள் கொடூர கொலை தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அறிவித்துள்ளார்.

2012-01-31/2012-02-02 காலப்பகுதியில் கஹவத்தையில் மகள் மற்றும் தாய் கொடூரமான முறையில் அடித்து, வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கஹவத்தை பகுதி மக்கள் மீண்டும் அச்சத்தில் வீழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் 0777 887744 மற்றும் 0773 350556 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து கொலை சம்பவம் குறித்து தகவல் கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தகவல் தருவோர் குறித்த இரகசியத் தன்மை பேணிப் பாதுகாக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now