தேடியது கிடைத்தது!!! அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வென்றுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலியஅணி 40.5 ஓவர்களில் 158 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மழை காரணமாக இப்போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு, இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு டக்வேர்த் லூயிஸ் விதியின்படி 41 ஓவர்களில் 152 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது இலங்கை அணி.
அவுஸ்திரேலியஅணியில் டேவிட் ஹஸி 58 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சாளர்களில் பர்வீஸ் மஹ்ரூவ் சிறப்பாக பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். திசேர பெரேரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கையின் சார்பில்அணித்தலைவர் மஹேல ஜயவர்தன 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப்பெற்றார். திலகரட்ன தில்ஷான் 41
பந்துகளில் 45 ஓட்டங்கiயும் குமார் சங்கக்கார 29 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றார்.
இத்தொடரில் இலங்கை அணி வென்ற முதலாவது போட்டி இதுவாகும். இப்போட்டியில் இலங்கை அணிக்கு போனஸ் புள்ளியொன்றும் கிடைத்தது.
Labels:
கிரிக்கட்