பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்காத விலையுயர்வு


news
வெற்றுத்தட்டுடன் புலம்பிக்கொண்டு பிச்சைக்காரர்கள் வீதி  வீதியாக அலைந்து திரிகின்றனர். தட்டில் விழுந்த ஒரு ரூபா, இரண்டு ரூபா சில்லறைகளும் எரிபொருள்களின் விலையேற்றத்தால் இன்று தவறியும் கூட விழுவதில்லை எனத் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது சோர்ந்துபோயுள்ள பிச்சைக்காரர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

எரிபொருள்களின் விலை சாதாரணமாக இருந்த காலத்திலும் கூட சில்லறை நாணயங்கள், குறைவாகவே தட்டில் விழுந்தன. கிடைக்கின்ற சிறு தொகை பணத்தை வைத்து எமது சீவியத்தை நடத்தி  வந்தோம். இப்போது எரிபொருள்களின் விலை அதிகரித்ததன் காரணமாக முன்னர் தட்டில் குறைவாக விழுந்த சில்லறைகள் இன்று தவறியும் கூட விழுவதில்லை எனப் பிச்சைக்காரர்கள் தமது சோகங்களைப் புலம்பியவாறு நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

"நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இன்று நாம் வெறும் தட்டை ஏந்திக்கொண்டு திரிகிறோம். பொருளாதாரப் பிரச்சினையால் பிச்சைக்காரர்களாகிய நாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்"  என்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நின்று பிச்சைத்தட்டை நீட்டிய ஒருவர் புலம்பினார்.
இதற்குக் காரணகர்த்தாக்கள் அரசியல்வாதி. என்று கூறிய அவர் அரசியல்வாதிகளைத் திட்டித்தீர்க்கவும் தவறவில்லை. 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now