
240 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கொழும்பு
வெள்ளவத்தை பொதுச் சந்தை நேற்று முந்தினம் (ஜன-31) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால்
உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்டுள்ள இப் பொதுச்சந்தையில்
83 கடைத்தொகுதிகள் அமைந்துள்ளதுடன், 53 அறைகள் மரக்கறி மற்றும் பழவகை
விற்பனைக்காகவும், 21 அறைகள் மீன் விற்பனைக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர இலங்கையின் முதலாவது நான்கு மாடிகளைக்கொண்ட
வாகனத்தரிப்பிடமும் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மாநகர மேயர் மொகமட் முஸம்மில் மாநகர எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்து மொரகொட, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.