

சட்டவிரோதமாக
மின்சார இணைப்பை பெற்றிருந்த 331 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சு
தெரிவிக்கின்றது.
மின் மாணி மோசடி மற்றும் கொக்கி மாட்டுதல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகள்
மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் மின்சாரசபைக்கு சுமார் 215 இலட்சம் பரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இந்தத் தொகையில் சுமார் 36 இலட்சம் ரூபாவை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்
அபராதமாக அறவிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.