புத்தளம்,முந்தல்
பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தல் பிரதேசத்தில் பாலர்
பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இந்தச் சிறுமியை நேற்றுப் பகல் (22)
கடத்தப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வந்த நபர் ஒருவர் குறித்த சிறுமியின்
உறவினர் ஒருவர் மரணமானதாக பாலர் பாடசாலை ஆசிரியருக்குக் கூறிவிட்டு
பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இந்தக் கடத்தலின் பின்னணியில்
பிள்ளையின் தாயாரின் சகோதரர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு
தப்பிச் சென்றுள்ளதாகவும் கடத்தப்பட்ட பிள்ளை தொடர்பில் இதுவரை எவ்விதத்
தகலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.எஸ்.சுவஸ்திகா என்ற
சிறுமியே காணாமல் போயுள்ளார்.(படம்: நன்றி அததெரண தமிழ்)


