நாட்டின் சுகாதார சேவைகளை முன்னேற்றவென ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் 400 கோடி ரூபா நிதியை வழங்க முன்வந்துள்ளது.
இதில் 100 கோடி மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் மற்றும் புதிய உபகரணங்கள் கொள்வனவிற்கும் செலவிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கல்கமுவ, தெல்தெனிய, களுவாஞ்சிக்குடி மற்றும் வரகாபொல ஆகிய வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு எஞ்சியுள்ள நிதி பயன்படுத்தப்படவுள்ளது.