எரிபொருள் விலை உயர்வை கண்டித்து
சிலாபத்தில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது துப்பபாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மீனவரின் இறுதிக் கிரியைகள் இன்று (18) மாலை
3 மணியளவில் இடம்பெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தோனி ஜோசப் என்ற மீனவரே உயிரிழந்தார். இறுதிக்
கிரியைகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என சிலாம் பொலிஸார் நீதிமன்றிற்கு
அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்றைய இறுதிக் கிரியைகளின் போது
கலவரத்தில் ஈடுபடக் கூடாதென உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.