இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒரு நாள் போட்டி சமநிலையில் முடிந்ததை
அறிந்திருப்பீர்கள். இப்போட்டியில் இந்தியாவின் பதில் துடுப்பாட்டத்தின்
போது, 30 வது ஓவரில் மொத்தம் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதாக ஒரு சர்ச்சை
எழுந்துள்ளது.
மாலிங்க வீசிய அந்த ஓவரில், 6 வது பந்தை வீச முன் நடுவர், ஓவர் முடிந்ததாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆட்டம் முடிவடைந்த பிறகு நிருபர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் தோனி, தமது துடுப்பாட்டத்தின் போது 30 வது ஓவரில் மொத்தம் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன என கூறினார். ஆனால் போட்டி முடிவடைந்த பிறகு இது குறித்து சர்ச்சை எழுப்புவதில் பயனேதும் இல்லை என அத்தோடு அப்பிரச்சினையை முடித்து கொண்டார்.
எனினும் இப்போட்டியில் இன்னுமொரு பந்து மீதமிருந்திருந்தால், அப்பந்து வீசப்பட்டிருப்பின் மேலும் ஒரு ரன் அடித்து இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும் என்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

உண்மையில் 30 வது ஓவரில் ஐந்து பந்துகள் தான் வீசப்பட்டிருந்தனவா? ஆம்
என, இதோ போட்டியை லைவ் காமண்ட்ரி கொடுத்து வந்த கிரிக்கின்ஃபோ தளமும் உறுதி
செய்கிறது.