மஹரகம மக்களுக்கு புற்றுநோய் அபாயம் உள்ளதா?


மஹரகம வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பிரதேச மக்கள் புற்றுநோய்க்கு இலக்காகும் அவதான நிலை காணப்படுகின்றதா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் இரண்டு தினங்களில் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாக அணுசக்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.
 

புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் நாளைய தினம் அணுசக்தி அதிகாரசபையின் கதிர்வீச்சுப் பிரிவின், உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை புற்றுநோய் வைத்தியசாலையின் கழிவுப் பொருள் அகற்றும் குழாய் மார்க்கத்தை கடலுக்கு திருப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் புற்றுநோய் வைத்தியசாலையின் மலக் கழிவுகள் ஒன்றுசேரும் தாங்கிகளை நான்கு மாதங்களுக்கு ஒருதடவை சுத்திகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அணுசக்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now