எகிப்து கால்பந்து போட்டியில் பயங்கர கலவரம். 73 பேர் பலி. 1000 பேர்களுக்கு மேல் படுகாயம்

)
A big violence in Egypt football match. 73 dead

எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்து நாட்டில் உள்ள சிட்டி ஆப் போர்ட் நகரில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதியது. இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப் போர்ட் நகரில் மேற்கண்ட இரு அணிகளும் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது. 

போட்டிய‌ை காண ஆவலுடன் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அணிகளை ஆதரித்து ரகளையி் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக 73 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரசிகர்களிடையே உண்டான மோதல் எகி்ப்து காலபந்து வரலாற்றில் இது ஒரு மோசமான விளைவு என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு மிகப்பெரிய வரலாற்று கறை என சுகாதாரத்துறை ‌அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now