அதிகரித்து
வருகின்ற உணவு விலையால் வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளில் உள்ள சுமார்
ஒரு பில்லியன் பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளுக்கான உணவைக் குறைத்து
வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு முகவர்
அமைப்பு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ், பெரு, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவிலே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஆறு பெற்றோரில் ஒருவர் உணவுக்காக வேலைக்கு
போவதற்காக தங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர்
என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை காணப்பட்ட
முன்னேற்றத்தை உணவு விலை அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஆகியன
பாதிப்பதாக சிறுவர் பாதுக்காப்பு முகவர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
12 மில்லியன் குழந்தைகள் இறப்பு முன்னர்
இருந்தது. அது இப்போது 7.6 மில்லியன் ஆகக்குறைந்துள்ளது.
ஊட்டச்சத்துக்குறைவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும்
இறப்பு வீதம் அதிகரிக்கும் என்று சிறுவர் பாதுகாப்பு முகவர் அமைப்பு
எச்சரித்துள்ளது.