பேஸ்புக்கை மிரட்டும் மில்லத்பேஸ்புக்: முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில்

பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய சமூக இணையதளத்தின் ஸ்தாபகர்கள் பேஸ்புக் இணையதளத்தில் முஸ்லிம்கள் தமது பயனர் கணக்குகளை அழிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளதுடன் இதற்குப் பதிலாக மில்லத் பேஸ்புக் இஸ்லாமிய சமூக இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் வகையில் ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் உள்ளடங்கலாக இந்த சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .


உலகின் மிகப்பெரிய சமூக இணையதளம் 2010ஆம் ஆண்டு மதிப்புக்கேடான வரைபடம் ஒன்றை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் மில்லியன்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தியது என மில்லத் பேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவரான உமர் ஸகீர் மீர்பேஸ்புக்கில் மதிப்புக்கேடான செயல்களும் சமூக இணையதளங்களில்முஸ்லிம் இளைஞர்களின் விதிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானில்நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்தார்.

உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும்இநபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலகமுஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார்.

2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்துஇலட்சம் பாவனையாளர்களை கொண்டுள்ளது.

இதேவேளை துருக்கியின் இஸ்தான்பூல் நகரை தளமாக்கொண்டு salamworld எனும் இஸ்லாமிய சமூக இணையதளம் செயற்படவுள்ளது. salamworld இணையதளம் இவ்ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now