இலங்கைக்கு அண்மைய நாட்களில் வேற்றுக்கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது
.
குருணாகல்
மாவட்டத்தில் உள்ள வெலகல என்கிற இடத்தில் சில மர்ம உருவங்கள் சில தோன்றி
இருக்கின்றன என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இம்மர்மக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் இவ்வூடகங்கள் வெளியிட்டு உள்ளன.
இப்புகைப்படங்களில் தெரிகின்ற மர்ம உருவங்கள் வேற்றுக் கிரகவாசிகளாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் கிளப்பி உள்ளன.பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
இலங்கைக்கு ஏற்கனவே முந்தைய வருடங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வந்திருந்தனர் என்று கதைகள் அடிபட்டு இருக்கின்றன.
இது தொடர்பாக வெளியாகி இருந்த வீடியோ ஒன்றையும் வாசகர் பார்வைக்கு தருகின்றோம்.