இரத்தம் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை! (படங்கள்)

இறப்பிலிருந்து மீண்ட அதிசய குழந்தை பற்றிய செய்தியே இது... Oliver Morgan என்ற இந்தக் குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் இரத்தம் எதுவும் இல்லை என்ற மருத்துவ அதிசய உண்மை தெரிய வந்துள்ளது.

குழந்தை பிறக்கும் போது வெளிறிய நிறத்தில் தான் இருந்தது. குழந்தை பிறந்த போது முதல் 25 நிமிடங்களுக்குள் இருதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக குழந்தைக்கு மென்மையான இருதய மசாஜ் உடன் ஒட்சிசன் சுவாசமும் வழங்கப்பட்டு உயிரைக்காக்கும் வழிமுறையாக தொப்புள் கொடி மூலம் இரத்தமும் ஏற்றப்பட்டது.


குழந்தையைப் பாதுகாக்க மருத்துவர்கள் கனமான இருதயத்துடனும் கண்ணீருடனும் போராடினர். Oliver தற்சமயம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறான்.

இப்பொழுது குழந்தைக்கு 15 மாதங்கள் ஆகின்றது. அம்மாவான Katy உம் அப்பாவான Jeff உம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். குழந்தை உயிருடன் தப்பித்திருப்பது பற்றி 36 வயதான தாயாரான Katy கருத்துத் தெரிவிக்கையில்,

Oliver பிறந்த கதையைச் சொல்ல இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ரத்தமே இல்லாமல் தான் பிறந்தான். ஆனால் தற்போது என் முன் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். மருத்துவர்களால் மீளக் கொடுக்கப்பட்ட அற்புத பரிசாகவே நான் அவனைப் பார்க்கிறேன். அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.

 
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now